அகநானூறு பிரிவுகள் யாவை

agananooru moondru pirivugal

அகப்பொருள் சார்ந்த 400 பாடல்களை கொண்ட நூல் அகநானூறு ஆகும். அதாவது அகப்பொருள் சார்ந்த 400 பாடல்களின் தொகுப்பாக விளங்குவதனால் அகநானூறு என அழைக்கப்பட்டது. இந்நூல் அகவற்பாவினால் பாடப்பட்டுள்ளது.

அகநாநூறு நூலானது சங்ககால நூலாகும். இது எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும். எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றினை, அகநாநூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களும் அகம் பற்றிக் கூறுவனவாகும்.

ஆயினும் அகம் என்னும் சொல்லால் குறிப்பிடப்படுவது அகநாநூறு மட்டுமே என்பது இதற்கு கூடுதல் சிறப்பாகும்.இதில் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்களால் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.

இதனைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார் ஆவார். இந்நூலை தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி ஆவார்.

இந்நூல் 13 அடி சிற்றெல்லையையும், 31 அடி பேரெல்லையையும் கொண்ட நீண்ட பாடல்களை கொண்டிருப்பதால் இதனை நெடுந்தொகை என்றும் கூறுவர். எட்டுத்தொகை நூல்களில் ஐந்திணை தழுவி வழங்கும் ஒரே நூல் அகநானூறாகும்.

அகநானூற்றினைப் பாடிய புலவர்கள் 146 பேராவர். 65 புலவர்கள் அகநாநூற்றில் உள்ள பாடல்களை மட்டுமே பாடியுள்ளனர். சொல்லவந்த கருத்தை உள்ளுறை வழியாக உழைப்பதே இதன் சிறப்பாகும். 114, 117, 165 ஆகிய பாடல்களின் ஆசிரியர்கள் பெயர் அறியப்படவில்லை.

அகநாநூறு பிரிவுகள்

அகநானூறு மூன்று பிரிவுகளாக உள்ளது.

  • 1 – 120 பாடல்கள் “களிற்றியானை நிரை” (1 – 120 பாடல்கள்)
  • அடுத்து 180 பாடல்கள் “மணிமிடை பவளம்” (121 – 300 பாடல்கள்)
  • கடைசி 100 பாடல்கள் “நித்திலக் கோவை” (301 – 400 பாடல்கள்)

திணை வகை

திணைவகை 5 காணப்படுகின்றது. பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்ப திணைகள் வரிசையாக வைத்து தொடுக்கப்பட்ட ஒரே நூல் அகநாநூறு ஆகும்.

பாலை திணை (மணலும் மணல் சார்ந்த இடமும்) – 1, 3, 5, 7… 399 என ஒற்றை எண்களைப் பெற்று வரும் பாடல்களாக உள்ளன. மொத்தமாக 200 பாடல்கள் உள்ளன.

குறிஞ்சித் திணை (மலையும் மலை சார்ந்த இடமும்) – 2, 8, 12, 22, 28….398 என 2, 8 இல் முடிவடைவது போல் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. மொத்தமாக 80 பாடல்கள் இத்திணையில் உள்ளன.

முல்லைத் திணை (காடும் காடு சார்ந்த இடமும்)- 4, 14, 24, 34….394 என 4 இல் முடிவடையக் கூடியவாறு பாடல்கள் அமைந்துள்ளன. மொத்தமாக 40 பாடல்கள் உள்ளன.

மருதம் (வயலும் வயல் சார்ந்த இடமும்) – 6, 16, 26, 36…396 என 6 இல் முடிவடையக் கூடியவாறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. மொத்தமாக 40 பாடல்கள் உள்ளன.

நெய்தல் திணை (கடலும் கடல் சார்ந்த இடமும்) – 10, 20, 30, 40,….400 என முடிவடையக் கூடியவாறு பாடல்கள் அமைந்துள்ளன. மொத்தமாக 40 பாடல்களைக் கொண்டமைந்துள்ளது.

வானொலி பற்றிய கட்டுரை