ஒரு சமூகச் சூழலின் குறிப்பிட்டதொரு கருத்தை சிறந்த முறையில் உணர்த்துவதற்கு துணையாக வரக்கூடியதொன்றாக பழமொழியானது காணப்படுகின்றது. அந்த வகையில் அறிவே ஆற்றல் என்பதானது அறிவின் மகத்துவத்தை சுட்டுவதாகவே காணப்படுகின்றது. அதாவது தனது அறிவை சிறப்புற பயன்படுத்துபவனே வாழ்வில் வெற்றியீட்டக்கூடியவனாவான்.
அறிவே ஆற்றல் பழமொழி விளக்கம்
அறிவே ஆற்றல் என்ற பழமொழியில் அனைத்து விதமான ஆற்றலையும் பெற்று தரக்கூடியது அறிவே ஆகும்.
மேலும் அறிவானது எம்மை அழிவிலிருந்து காக்கக்கூடியதாகும். அந்த வகையில் ஒருவர் கற்கும் கல்வியே அவரை சிறந்த ஆற்றல் மிக்கவராக மாற்றுகின்றது என்பதனையே சுட்டி நிற்கின்றது.
அறிவே எம்மை சக்தி வாய்ந்தவர்களாக மாற்ற துணை புரிகின்றது. அதாவது நாம் தேடிப் பெற்றுக் கொள்ளும் அறிவானது சிறந்ததாக காணப்படும் போது நாம் எம்முடைய வாழ்வை நோக்கி சிறப்பாக பயணிக்க முடியும்.
அறிவின் முக்கியத்துவம்
அறிவினை சிறந்த முறையில் பெற்றுக் கொள்பவர்கள் மகிழ்ச்சிகரமான வாழ்வை நோக்கியே பயணிப்பார்கள் அதேபோன்று அறிவில்லாதவர்களுடைய வாழ்வானது மகிழ்ச்சியற்ற பாதையை நோக்கியே செல்லும்.
அந்த வகையில் அறிவுடைய ஒருவரானவர் இவ்வுலகில் உயர்ந்த நிலையை அடையக்கூடியவராவர். மேலும் பிரச்சினைகளை தீர்க்கவும் ஒற்றுமை பேணி சாதனைகள் பலவற்றை படைப்பதற்கும் அறிவே பிரதானமானதொன்றாக காணப்படுகின்றது.
அறிவுடையவர்களின் நிலை
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரிடமும் எத்தகைய செல்வங்கள் காணப்பட்டாலும் அறிவினை சிறந்த முறையில் பயன்படுத்துபவனே எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்கின்றான்.
அந்த வகையில் அறிவுடையவர்களால் வீரத்தில் கல்வியில் என அனைத்திலும் வெற்றி பெற்று விட முடியும். அதாவது அறிவாற்றலானது எம்மை ஓர் விடயத்தில் திறன் படைத்தவர்களாக மாற்றுகின்றதோடு நல் விடயங்களும் அறிவுடையோரை நோக்கியே தேடி வரக்கூடியதாகும்.
அறிவுடமை
அறிவுடமை அதிகாரமானது அறிவின் பயன் பற்றியே எடுத்தியம்புகின்றது. அதாவது அறிவுடைமையானது மனிதனுக்கு கிடைக்கப்பெற்ற பொக்கிஷமாகும் என்ற வகையில் அறிவுடையவரே ஆற்றல் உடையவர் ஆவார் என்பதோடு அறிவுடையார் எல்லாம் உடையார் என்று வள்ளுவரானவர் அறிவின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகின்றார்.
மேலும் மனிதனானவன் தான் பெற்ற அறிவை நல் விடயங்களுக்கு பயன்படுத்துவதன் மூலமே எம்மை நன்மைகள் வந்தடையும் என்பதனை இவ் அறிவுடைமை அதிகாரமானது எடுத்துக் கூறுகின்றது.
அறிவானது எமக்கு உறுதியான அடித்தளத்தினை வழங்குவதனூடாக நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இதனூடாகவே நாம் சிறந்த எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதோடு அர்த்தமுள்ள விவாதங்களினையும் பின்பற்ற துணைபுரிகின்றது. மேலும் அறிவே சிறந்த படைப்பாற்றலை உருவாக்குவதற்கான அடித்தளத்தினையும் வழங்கி நிற்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் இணையமானது உள்ளங்கைக்குள் உலகம் என்பதனை எடுத்திம்பக்கூடியதாகவே திகழ்கின்றன. அதாவது தேவையான தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடிவதோடு அதிவேக கற்றலிற்கும் இணையமானது பங்களிப்பு செய்கின்றதனை காணக்கூடியதாகவே உள்ளது.
மேலும் வெவ்வேறு வகையான புதுவித சாதனைகளுக்கான அடித்தளத்தினே அறிவே வழங்கி வருகின்றது என்றவகையில் எமது அறிவே எம்மை ஆளுவதற்கான சக்தி என்பதோடு நல் அறிவை கற்று பிறருக்கு பயன்படும் வகையில் வாழ்கின்ற போதே அவ் வாழ்வு சிறந்ததாக திகழும்.
எனவேதான் எந்த ஒரு மனிதனும் நல்ல எண்ணங்கள் மற்றும் நல்ல விடயங்களை பற்றி அறிவை தேடிக்கொள்வதோடு அறிவே ஆற்றல் என்ற பழமொழிக்கிணங்க அனைத்திலும் மேலானது அறிவே என்பதனை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு செயற்படுகின்ற போதே சிறந்த முறையில் வாழ்வில் ஜெயிக்க முடியும்.