CWW கன்னங்கரா கட்டுரை

cww kannangara essay in tamil

இலங்கையின் கல்விக்கு அஸ்திவாரம் அமைத்து கொடுத்தவரும் மாணவர்களுக்கு கல்வி அறிவை வழங்குவதற்கு அதிகம் ஆர்வம் காட்டியவரும் C.W.W கன்னங்கரா ஆவார். இவர் நாட்டின் பல் துறைகளிலும் தனிப்பட்ட ரீதியான பணிகளை செய்துள்ளார்.

CWW கன்னங்கரா கட்டுரை

முன்னுரை

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட அழகிய தீவு இலங்கை நாடு ஆகும். இலங்கை நாட்டில் பல தலைவர்களின் தோற்றத்தை நம் இலங்கை வரலாற்றில் அறிந்திருப்போம்.

அந்த வரிசையில் இலங்கை நாட்டின் கல்விக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தவரும் ஆங்கிலயேரிடம் இருந்து நாட்டை விடுவித்துக்கொள்ள களத்தில் இறங்கிய போராட்டவாதியுமான இலங்கை நாட்டின் இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் C.W.W கன்னங்கரா அவர்களை பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

C.W.W கன்னங்கரா அவர்களின் இளமைகாலம்

1884ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் திகதி இலங்கை நாட்டின் தென்மாகாணத்தில் பிறந்தார். C.W.W கன்னங்கராவின் முழுப்பெயர் கிறிஸ்தோபர் வில்லியம் விஜயக்கோன் கன்னங்கரா ஆகும். இவர் தந்தை ஜோன் டானியல் விஜயக்கோன் கன்னங்கரா அவர்களுக்கும் தாய் எமிலி விஜயசிங்க அவர்களுக்கும் மகனாக பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை வெஸ்லிக் கல்லூரியில் பயின்றார். இளம் வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய இவர் கணித பாடத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

பின்னர் J.H டரெல் என்பவரால் கன்னங்கரா அவர்களுக்கு ரிச்மண்ட் கல்லூரி சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கன்னங்கரா அவரின் கல்வித்தகமை மேலும் வளர்த்து கொள்ள முடிந்தது. அத்துடன் விளையாட்டு துறையில் துடுப்பாட்ட விளையாட்டின் தலைவராகவும் இவர் இருந்தார்.

அதன் பிறகு கன்னங்கரா அவர்கள் கணித ஆசிரியராக ரிச்மண்ட் கல்லூரியிலேயே பணிபுரிந்தார். ஆசிரியர் பணியில் இருந்த போது வழக்கறிஞராக மாறுவதற்கான சட்டக் கல்வியையும் பின் தொடந்தார். கன்னங்கரா சட்ட கல்வியை கற்றதன் பிறகு வழக்கறிஞராக பணி புரிந்தார்.

C W W கன்னங்கரா அவர்களின் விடுதலை போராட்டமும் அரசியல் பாதையும்

அன்றைய இலங்கை ஆங்கிலயரின் வசம் காணப்பட்டது. கன்னங்கரா அவர்கள் இலங்கை மக்களை பார்க்கும் போது வழிகள் அடைபட்ட கூட்டு கிளி போல் ஆனதை எண்ணி வருந்தினார். இதனை இல்லாது ஒழிக்க பல அறிஞர்களுடன் ஒன்று சேர்ந்து விடுதலை போராட்டத்திலும் கலந்து கொண்டார். பின் நாட்டை சுதந்திர இலங்கையாக மாற்றிய பெருமைக்குரியவர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார்.

கன்னங்கரா அவர்கள் அரசியல் பாதைக்குள் வர அடித்தளம் அமைத்தது 1915ஆம் ஆண்டு ஏற்பட்ட சிங்கள மற்றும் முஸ்லீம்களுக்கு இடையிலான இனக்கலவரம் ஆகும். இக்கலவரத்தினால் சட்ட நிரூபண சபையில் பதவி வெற்றிடம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்று அரசியலுக்குள் சென்றார். பிற்பட்ட காலப்பகுதியில் இலங்கை தேசியக் காங்கிரஸின் தலைவராக பதவி வகுத்தார்.

C W W கன்னங்கரா அவர்களில் கல்வி தொடர்பான பங்களிப்பு

பல காலங்களின் பின் கன்னங்கார அவர்கள் அரச பேரவை தேர்தலில் போட்டியிட்டு நிறைவேற்று குழுவின் முதலாவது தலைவரும், இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சராகவும் பதவி வகுத்தார்.

அதன் பிறகு கல்வி தொடர்பிலான பல சிந்தனைகளை மாணவர்களிடையே புதைக்க விரும்பினார். இதனால் இலங்கை முழுவதும் இலவசக்கல்வியை வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.

இவரின் திட்டத்துக்கமைய இன்றைய காலகட்டம் வரையில் இலங்கையின் கல்வி நடவடிக்கை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தை என கன்னங்கரா அனைவராலும் அழைக்கப்படுகின்றார். இலங்கையின் எழுத்தறிவு வீதம் அதிகரிக்க காரணமும் கன்னங்கரா அவர்களே ஆகும்.

C W W கன்னங்கரா அவர்களின் இறுதி பக்கங்கள்

தனது அரசியல் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்த மகான் தனது அன்றாட செலவிற்காக பாராளுமன்ற பரிந்துரைக்கு ஏற்ப குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தை மாதாந்தம் பெற்றுக்கொண்டு தன் ஓய்வூதிய காலங்களை கழித்து வந்தார். அதன் பின் 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி தனது பாதைகளை நிறைவு செய்து இறைவனடி சேர்ந்தார்.

முடிவுரை

இவர் இன்று இவ் உலகை விட்டு சென்றாலும் இலங்கை மாணவர்களின் வேற்றுமையை தகர்த்து சம கல்வியை வழங்கிய மகான்.

அனைத்து மாணவருக்கும் மட்டுமல்ல இன்று  பல துறைகளில் பல நாடுகளில் பெயரும் புகழுடனும் வாழ ஒவ்வொரு இலங்கை மக்களுக்கும் வழிவகுத்து கொடுத்தவர் கன்னங்கரா அவர்கள் ஆவார்.

இவர் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுப்பது என்ற எண்ணம்  மட்டும் அல்லாது மாணவர்களின் எதிர்காலத்தையே மாற்றி அமைத்து  சென்றுள்ளார்.

பொதுநலவாய அமைப்பும் இலங்கையும்