இயற்கை எழில் நிறைந்த அழகிய தீவாக இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் மத்தியில் காணப்படுகின்றது. சுற்றுலா துறைக்கு பெயர் பெற்ற நாடாக வெளிநாட்டவர் மத்தியில் அறியப்படுகின்றது.
எமது நாடு இலங்கை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இலங்கை அமைவிடம்
- இலங்கையின் வளங்கள்
- இலங்கை மக்களின் வாழ்வாதாரம்
- இலங்கையின் தேசிய கொடி மற்று தேசிய இலட்சியங்களில் குறிப்பவை
- முடிவுரை
முன்னுரை
நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டது தீவு என்போம். பொதுவாக தீவுகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக காணப்படுகின்றது. அந்த வரிசைகளின் இலங்கைத்தீவும் சுற்றுலா பயணிகளை கவரும் அழகிய நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது. இக்கட்டுரையில் இலங்கை தீவைப் பற்றி நோக்கலாம்.
இலங்கை அமைவிடம்
ஆசிய கண்டத்திற்கு தெற்காகவும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு மேற்காகவும் இந்து சமுத்திரத்திற்கு வடக்காகவும் ஆபிரிக்க கண்டத்திற்கு கிழக்காகவும் எமது இலங்கை நாடு அமைந்துள்ளது. இது இந்திய நாட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.
நம் இலங்கை நாட்டை நாடுகாண் பயணங்களின் போது பல வெளிநாட்டவர்களால் பல பெயர் கொண்டு அழைத்தனர். தப்ரபேன், சிவப்பு தீவு, இலங்காபுரி என்று இலங்கையை குறிப்பிட்டு கூறியுள்ளார்கள்.
இலங்கையின் வளங்கள்
தீவுகளுக்கு மத்தியில் உள்ள இவ் அழகிய நாடு அதற்கு இடையில் மலைகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், காடுகள், கடற்கரைகள், அரியவகை உயிரினங்கள், பழமையான தொல்பொருள் ஆவணங்கள், கலங்கரைகள், இரத்தினக்கற்கள், இயற்கை துறைமுகங்கள் என இயற்கையான வளங்களை கொண்டு அமைந்துள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் நம் இலங்கை நாடு தமது வளங்களை பயன்படுத்தி பல நாடுகளுடன் வர்த்தக தொடர்பு ஏற்படுத்தி உள்ளது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு.
இலங்கை நாட்டின் தேயிலை வளத்தை எடுத்துக்கொண்டால் இலங்கை தேயிலைக்கு வெளிநாடுகளில் உள்ளவர்கள் இன்றும் ஆர்வம் காட்டுகின்றனர்.
வாசனை திரவியங்கள், கருவா, ஏலம் போன்ற வாசனை பொருட்களும் இலங்கை நாட்டின் வளங்களில் ஒன்றாகவே உள்ளது. அத்துடன் இறப்பர், கோப்பி போன்றவற்றையும் அதிகம் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படுகின்றது. இலங்கை நாட்டின் கடல் உணவுகளிற்கும் என்றுமே ஒரு கேள்வி உலகநாடுகளில் காணப்படுகின்றது.
இலங்கை மக்களின் வாழ்வாதாரம்
இலங்கை நாட்டில் தமிழர், முஸ்லீம், சிங்களவர், பறங்கியர் என ஒன்றுக்கு மேற்பட்ட இனமக்கள் காணப்படுகின்றனர்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளை அதிகமான மக்கள் பேசுகின்றனர். இவ்வாறு இனங்கள் மொழிகள் வேறுபாடுக்கு அமைய கலாசாரங்களும் வேறுபடுகின்றன.
இலங்கை நாட்டில் பல வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றது. கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், விகாரைகள் என நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் பரவிக் காணப்படுகின்றது.
பல பிரசித்தி பெற்ற இதிகாச கதைகளின் மையமும் இலங்கையின் பல பாகங்களை குறிக்கின்றது. அத்துடன் உணவுப்பழக்கம், ஆடை அணிகலன்களும் பல வேறுபாடுகளை காணலாம். ஒவ்வொரு மத சடங்குகளும் இங்கு வேறுபட்டு காணப்படுகின்றது.
இலங்கையின் தேசிய கொடி மற்றும் தேசிய இலட்சினையில் குறிப்பவை
ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான ஒன்று அந்த நாட்டின் தேசிய கொடி, தேசிய இலட்சனை என்பனவாகும். இலங்கை நாட்டின் தேசியகொடியில் இலங்கை பற்றிய குறிப்புகளை குறிக்கின்றது.
அவையாவன தேசிய கொடியில் காணப்படும் வாளேந்திய சிங்கத்தின் உருவம் வீரத்தையும், சிங்கத்தை சுற்றியுள்ள சிவப்பு நிறம் சிங்கள மக்களையும், அருகில் உள்ள செம்மஞ்சள் நிறம் கோடு தமிழ் மக்களையும், பச்சை நிறம் முஸ்லீம் மக்களையும், கொடியை சுற்றியுள்ள மஞ்சள் நிறம் தேசிய ஒருமைப்பாட்டையும், சுற்றியுள்ள மஞ்சள் நிற அரச இலைகள் நான்கு பண்புகளையும் வெளிப்படுத்துகின்றது.
தேசிய இலட்சனையில் தர்மச்சக்கரம் தார்மீகத்தையும், மலரிதழ்கள் தூய்மையையும், வாளேந்திய சிங்கம் வீரத்தையும், நிறைகலசம் சௌபாக்கியத்தையும், சூரியனும் சந்திரனும் உலக நிலைப்பாட்டையும், நெற்கதிர் தன்னிறைவையும் குறித்து நிற்கின்றது.
முடிவுரை
அழகிய இயற்கைகளை மட்டும் கொள்ளாது பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இலங்கை நாடு காணப்படுகின்றது. எமது நாட்டில் வாழும் அனைத்து கலை, கலாசார வேறுபாடுகள் வெளிநாட்டு மக்களின் ஈர்ப்புக்கு காரணமாக அமைகின்றது.
சுற்றுலா பயணிகள் எமது அழகிய இலங்கை நாட்டில் ஒரு முறை கட்டாயம் வருகை தந்து வியந்து பார்க்க பல அதிசயங்கள் உள்ளது. பண்டைய தொழிநுட்பமாக இருக்கலாம். சிகிரியா போன்ற சித்திரங்களாக கூட இருக்கலாம். அத்துடன் பாரம்பரியத்தின் அற்புத கூடம் இலங்கை என்றால் மிகையாகாது.