ஆசிய கண்டத்திலே கடன் காரணமாக ஏற்பட்ட தாக்கத்தால் பாரிய பிரச்சனைக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்ட நாடு இலங்கை ஆகும். இதன் விளைவாக நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பொருளாதார நெருக்கடிக்கு அரசியலின் தாக்கம்
- பொருளாதார நெருக்கடிக்கான ஏனைய காரணிகள்
- பொருளாதார நெருக்கடியால் நாட்டிற்குள் ஏற்பட்ட முரண்பாடுகள்
- பொருளாதார நெருக்கடியை குறைக்க அரசாங்கத்தின் தற்போதைய நடைமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
அழகிய சுற்றுலா மையங்களை கொண்ட இலங்கை நாடு இயற்கை அழகுடன் உருவான ஒரு தீவு ஆகும். இது ஆசியகண்டத்தில் அமைந்துள்ளது.
இலங்கையின் தற்கால நிலமை பாரியளவில் மந்தநிலைக்கு தள்ளப்பட்டு சென்றுவிட்டது. இதற்கான பல காரணங்கள் பல தரப்பினரால் பேசப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடிக்கு அரசியலின் தாக்கம்
இலங்கை நாட்டின் இப்பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இலங்கையில் அரசியலில் உள்ள முறையற்ற நடவடிக்கை என பலர் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர் இது சில அரசியல்வாதிகளின் பணம் தொடர்பான மோசடிகள் தான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.
இதில் பல உண்மை கூற்று இருப்பினும் இலங்கை நாடு ஆரம்பப்பகுதியிலேயே பின்னடைவில் காணப்பட்டது. அவற்றை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டமையால் தான் இன்று நாடு பெரும் மந்தநிலையை அடைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கான ஏனைய காரணிகள்
பொருளாதார நெருக்கடிக்கு ஏனைய காரணிகளாக பிற நாடுகளிடம் இருந்து அதிகளவு கடன் தொகையை பெற்றமை, நாட்டுக்குள் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம், உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல், கொரோனா தொற்று நோய் பரவியமை என நாட்டுக்குள் ஏற்பட்ட பாதகமான விளைவுகளை தொடர்ச்சியாக இலங்கை எதிர் நோக்கியதால் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை நாடு முழுவதும் முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
இவற்றால் ஏனைய நாடுகள் இலங்கைக்கு வருகை தருவதை குறைக்க ஆரம்பித்தனர். இதனால் சுற்றுலாதுறை ரீதியான வருமானம் குறைவடைந்து. இது பாரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் தடைப்பட்டது.
பொருளாதார நெருக்கடியால் நாட்டிற்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் இறுதியாக நாட்டுக்குள் பொருளாதார பிரச்சினை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டில் மின்சாரம் துண்டிக்க வேண்டி ஏற்பட்டது.
இதனால் தொழிற்சாலை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. கல்வி தொடர்பான நடவடிக்கைகளும் கால தாமதமானது. பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பும் ஏற்பட்டது.
சீரற்ற சட்டநடவடிக்கைகள் காணப்பட்டது, நிதி நிறுவனங்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. வீதி ஓரங்களில் மக்கள் உறங்கி கொண்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் பின்னர் பொருளாதார நெருக்கடியை குறைக்க புதிய அரசபை தோற்றம் பெற்றது.
நாட்டுக்குள் பல பொருட்களுக்கான வரி அதிகளவு வசூலிக்கப்பட்டது. வருமான வரி தொடர்பில் அதிக வரி செலுத்தும் கட்டாயத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சுற்றுலா துறை தொடர்பில் அதிக கவனத்தை செலுத்தினர். வங்கி கணக்குகளின் பணபெறுமதி தொடக்கம் சொத்து வரி வரை வசூலிக்கப்பட்டது.
முடிவுரை
இலங்கை நாட்டின் மாபெரும் நெருக்கடிக்கு இலங்கை அரசாங்கத்தால் முடிந்த அளவிலான பல நடைமுறைகளை கையாளுகின்றது. இதனை வெற்றிகரமாக நிறைவேற்றும் பொழுது இலங்கை பாரியளவிலான வளர்ச்சியை அடையும் என நம்பப்படுகின்றது.