இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள்

ilankaiyin porulaathaara nerukkadikaana kaaranankal

கடன் அன்பை முறிக்கும் எனும் வாக்கு எப்படியோ அப்படி ஆகிவிட்டது நம் இலங்கை நாடும். கடனை அடைக்க கடன் வாங்கி மறுபடியும் அந்த கடனை அடைக்க கடன் வாங்கி கடன் என கடனுக்கு மேல் கடன் வாங்கியதால் இன்று நாட்டு மக்கள் தெருவுக்கு வந்துவிட்டனர்.

இலங்கை நாட்டின் இனப்பிரச்சினையில் தொடங்கி இன்று நாட்டின் பொருளாதார நிலைக்கு எல்லோரும் கேள்விகுறி ஆகிவிட்டோம்.

பார்க்கும் இடமெல்லாம் கடனில் இலங்கை எனவும் பிற நாடுகளில் இலங்கை மக்களை ஒரு கஷ்டப்பட்ட குடும்பசூழலில் உள்ள மாணவனை போலும் பார்கின்றனர்.

இலங்கையின் இன்றைய நெருக்கடிக்கு பல காரணங்கள் பல கருத்துக்கள் என பல தரப்பினர்களால் முன்வைக்கப்படுகின்றது

ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் செயற்பாட்டின் முக்கியத்துவம்

ஒரு நாடு இரு பிரதான காரணிகளை மிக முக்கியமாக கவனத்தில் எடுக்கின்றது. அவையாவன அவ் நாட்டின் அரசியலும், பொருளாதாரமும் ஆகும்.

அதனடிப்படையில் நாட்டின் பொருளாதார நிலைப்புதன்மையை பொறுத்த அந்த நாட்டில் உணவு, உடை, கலாசாரம், கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், சனத்தொகை வீதம், இறப்பு வீதம், பல்துறைகளில் செயற்பாடு காணப்படும். எனவே ஒரு நாட்டின் பொருளாதாரம் அவ் நாட்டின் பாரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

இதே போன்று தான் அரசியலும்,பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் செயற்படுத்த சிறந்த அரசியலும் வலுவான அரசியலமைப்பும் காணப்பட வேண்டும்.

அரசியல் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையும் தான் நாட்டின் மிக பெரிய பொருளாதாரம் எனவும் பலர் கூறியுள்ளனர். எனவே தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பின்னேற்றத்திற்கும் அவ் நாட்டின் அரசியலையும் பொருளாதார நடவடிக்கையையும் குற்றம் சாற்றுகின்றனர்.

நாட்டின் பொருளாதார நடவடிக்கையை மாற்றியமைக்கும் காரணிகள்

ஒரு நாட்டின் சனத்தொகைக்கு ஏற்ப பொருளாதாரம் இருப்பது கட்டாயமான ஒன்றாகும். இதை பழைய காலங்களில் மன்னராட்சிகளில் கூட கவனம் செலுத்தி இருப்போம்.

நாட்டு மன்னன் பிற நாடுகளுடன் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்புகளை வைத்திருப்பான். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை பேண முடியும் என்பதை தெரிந்து அக்காலகட்ட வணிகத்துறையை மேம்படுத்தி வைத்திருப்பார்கள். இதனால் அந்நாட்டு மக்களுக்கு தேவையான பொருளாதாரங்களை வழங்க முடியும் எனவும் அறிவுடன் செயற்பட்டான்.

இன்றைய காலகட்டங்களிலும் அதைப் போன்று ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகளை நவீனமயமாக உபயோகப்படுத்துகின்றனர். கடல் வழி, ஆகாய வழி, நீர் வழி என ஏற்றுமதி, இறக்குமதி செயற்படுகின்றது.

ஏற்றுமதி பொருட்களாக யானைத்தந்தம், இரத்தினக்கல், பெரும்தோட்டபயிர்களாக தேயிலை, இறப்பர், கருவா, புகையிலை என பிற நாட்டுக்கு வழங்குகின்றனர்.

அத்துடன் நட்புறவுடன் செயற்படுவதற்காக நாடுகளிடையே ஒப்பந்தங்கள், உடன்படிக்கை, நன்கொடைகள் என பல செயற்பாடுகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முயல்கின்றனர்.

இவை போன்று நாட்டின் உள்நாட்டு உற்பத்திகள் தொடர்பாகவும் அதிககவனம் செலுத்தப்பட வேண்டும். வேளாண்மை மற்றும் விலங்கு வளர்ப்பு, கைத்தொழில் உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை என அனைத்து விடயங்கள் மூலமாகவும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடிகின்றது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஏதுவாக அமைந்த காரணிகள்

இலங்கை நாட்டில் பொருளாதார நடவடிக்கையில் காணப்பட்ட குறைபாடு தான் இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு காரணம். கடனை சரிவர செலுத்தாமை முதற் காரணமாக பல தரப்பினர் கூறுகின்றனர்.

மற்றும் சொந்த தேவைக்கான செலவுகளை தனிப்பட்ட ரீதியான அரசியல்வாதியின் திருட்டு எனவும் சிலர் கூறுகின்றனர். இருப்பினும் இவை மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இல்லை இவற்றுடன் இன்னும் பல காரணிகள் அமைகின்றன.

அவையாவன நாட்டுக்குள் சமாதானமும் சமத்துவமும் இல்லாத தன்மை காணப்படல். அதாவது இனரீதியான பிரச்சினையை உருவாக்கி மக்களுக்குள் சண்டையை ஏற்படுத்தி தமக்கு சாதகமாக தேர்தல் வாக்குகளை பெறுவதை எண்ணமாகக் கொண்டு நாட்டை நடத்துகின்றனர்.

இதனால் இனக்கலவரம் உருவாகும் நிலைமைக்கு நாடு தள்ளப்படுகின்றது. இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

1915ஆம் ஆண்டு ஏற்பட்ட சிங்களவரினால் தாக்கப்பட்ட முஸ்லீம் கலவரங்கம், 1958, 1977, 1983 ஆண்டுகளில் சிங்களவரால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட தாக்குதல், இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பன இனக்கலவரத்திற்கு உதாரணமாக கூறலாம். இவற்றினால் இலங்கை நாடு பாரிய பொருளாதார பின்னடைவுக்கு வழிவகுத்தது.

அடுத்து அரசியலில் உள்ள சீரற்ற கட்சிகளின் நடவடிக்கை, சுற்றுலா துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி, ஏற்றுமதி, இறக்குமதியில் அமுல்படுத்திய தடை, கொரோனா தொற்று நோய் பரவுதல், நாட்டின் தேவையற்ற விடயங்களுக்கு முதலிட்டமை என இவற்றினாலும் தான் நாடு நிர்க்கதியாகும் நிலைக்கு சென்றுவிட்டது.

இலங்கையின் பொருளாதார நடவடிக்கையை தடுக்கும் வழிகள்.

  • இன ரீதியான ஒருமைப்பாடை நாட்டு தலைவர்கள் சார்பில் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
  • சுற்றுலாத்துறை சார்பான கவனத்தை ஈர்க்கும் வழிகளை உருவாக்குதல்.
  • பணவீக்கம் தொடர்பான கருத்துகளை ஆராய்ந்து செயற்படல்.
  • கடன் தொடர்பிலான கவனத்தை பொதுமக்களிடையை பரிந்துரை செய்தல்.
  • புதிய அரச சபையை உருவாக்கல்.
  • ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் கவனம் செலுத்தல்.
  • உள்நாட்டு கைத்தொழிலை வளர்ச்சியடைய செய்தல்.

இவற்றின் மூலம் இயன்றளவிலான நாட்டின் பொருளாதார நெருக்கடியை குறைக்க முடியும். நம் இலங்கை நாட்டை சிறந்த பாதைக்கு கொண்டு வர நாமும் கைகொடுத்து உதவி செய்ய வேண்டும். அப்பொழுது தான் எமக்கு தந்த சுதந்திர இலங்கை நாட்டை எம் எதிர்கால சந்ததியினருக்கும் கடனில்லா சுதந்திரமான இலங்கையாக கொடுக்க முடியும்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி கட்டுரை