இந்த உலகில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இவ்வுலகை விட்டு மறைந்து செல்லக் கூடியவர்களே என்ற வகையில் அவர்களின் மறைவிற்கு பின்னர் அவர்களது நினைவானது எம்மை விட்டு நீங்காத ஒன்றாகும்.
இவ்வாறு இருந்த போதிலும் இறந்தவர்களின் படங்களை வீட்டின் அறையில் வைத்துக் கொள்வது இன்று வரை பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகவே காணப்படுகின்றது.
இறந்தவர்களின் படங்களை வைக்கும் திசை
இறந்து போன முன்னோர்களின் படங்களை வைத்துக் கொள்வது ஓர் மரபாகும் என்றடிப்படையில் அவர்களின் படங்களை வாஸ்து சாஸ்திர படி வடக்கு திசையில் வைப்பதே சிறந்ததாகும்.
அதாவது இறந்தவர்களுடைய படத்தினை வடக்குத் திசை பார்க்கிலும் அவர்களது முகமானது தெற்கு திசை பார்த்தவாறும் வைத்தல் வேண்டும்.
எமதர்மனுக்குரிய திசையாகவே தெற்கு திசையானது காணப்படுவதோடு மட்டுமல்லாமல் இத்திசை நோக்கி பார்த்தவாறு வைப்பது எமது வீடுகளில் இழப்புகள் ஏற்படாது எம்மை காக்கக் கூடிய தொரு செயலாகும். தெற்கு திசை பார்த்து வைத்தலானது தீய நிகழ்வுகளை தடுக்கின்றது.
இறந்தவர்களின் படங்களை வைக்கக் கூடாத இடங்கள்
இன்று வீட்டின் பல பகுதிகளில் இறந்தவர்களின் படங்களானவை வைக்கப்பட்டு காணப்படுகின்றது. அந்த வகையில் எம்மை விட்டு மறைந்தவர்களின் படங்களை பூஜை அறையில் வைத்து வழிபடுவது கெடுதியாகும்.
மேலும் சுவாமி படங்கள் காணப்படும் இடங்களில் இவர்களது படங்களை வைப்பது வீட்டில் தடைகளை ஏற்படுத்தக் கூடியதொரு செயலாகும்.
அது மட்டுமல்லாமல் உயிருடன் இருப்பவர்களின் படங்களுக்கு அருகிலும் இறந்தவர்களுடைய படத்தை வைப்பதானது அவர்களது ஆயுளை குன்றச் செய்கின்றது. அத்தோடு படுக்கை அறையில் இவர்களது படத்தை வைப்பது எமக்கு தீவினைகளை விளைவிக்கக் கூடியதே.
பூஜை அறையில் இறந்தவர்களின் படங்களை வைக்கலாமா?
எம்முடன் இருந்து இவ்வுலகை விட்டு எமக்கு பிடித்தமானவர்கள் சென்ற போதிலும் அவர்களை எண்ணி தினமும் வருந்தக் கூடியவர்களாகவே மனிதனானவன் காணப்படுகின்றான்.
அந்த வகையில் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு தீய குணத்திற்கு ஆட்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர் என்றடிப்படையில் அவர்களை கடவுளிற்கு நிகராக வழிப்படுவது என்பது பிழையானதொரு செயலாகும்.
பூஜை அறை என்பது மிகவும் புனித மிக்கதொரு இடமாகும். அதாவது பூஜை அறையானது மனதிற்கு அமைதியையும் சாந்தத்தினையும் ஏற்படுத்தக் கூடியதொரு இடமாகும். இவ் அறையில் தூய்மை பேணப்படுவதோடு அதனை சிறந்த முறையில் பாதுகாப்பாக வைத்திருப்பது எம் அனைவரினதும் கடமையாகும்.
அதாவது இன்று பலர் முன்னோர்களை வழிபாடுசெய்கின்ற போது பூஜை அறையில் விளக்குகளை ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்ற செயலானது தடுக்கப்பட்டதொன்றாகவே அமைந்துள்ளது. அவர்களை வழிபாடு செய்ய வேண்டுமாயின் அதற்கென்று தனியான விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.
அத்தோடு அவ் விளக்கில் நல்லெண்ணெய் மற்றும் நெய் என எதுவேண்டுமானாலும் பயன்படுத்தி விளக்கேற்றலாம். விளக்காக காமாட்சி விளக்கு அல்லது வெள்ளி விளக்கு என பிடித்தமான விளக்குகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். இது போன்றே நெய் வேத்தியம் சுவாமிக்கு படைக்கும் உணவில் சிறிதளவை முன்னோர்களுக்கு படைக்க முடியும்.
பூஜை அறையில் இறந்தவர்களின் படங்களை வைப்பதானது எம்மையும் எம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கக் கூடிய தொரு செயலாகும். அந்த வகையில் நாம் சிறந்த திசையில் வைப்பதன் மூலமே எம் வாழ்வானது சிறப்பாக காணப்படும்.