கருங்காலி மாலை எந்த ராசிக்காரர் அணியலாம்

karungali malai yar yar aniyalam

பல நூற்றாண்டுகளாக தமிழ் எழுத்துக்களை போல் கண்டுபிடிக்கப்பட்டவை தான் இன்றைய நவீன மருந்துகள் என்பது யாரும் அறிந்தது உண்டா? நம் பழைய சமூகத்தினரின் நோய்களிற்கு நிவாரணமாக மூலிகை மரங்கள், செடிகள், கொடிகள் என பலவற்றை பயன்படுத்தினார்கள்.

இவற்றில் கருங்காலி மரம், செங்காலி மரம், தேக்கு மரம், முதுரை மரம், பனை மரம், வேப்பமரம் என அன்றைய வீடுகளின் கட்டுமான கட்டிடங்களில் பார்க்கலாம். இதற்கு காரணம் இவ் மரங்களின் மூலம் நோய்யற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறலாம் என்பதுடன் ஒவ்வொரு மரத்தின் பயனும் ஒவ்வொரு வகையான வேறுபாட்டையும் காட்டுவதால் ஆகும்.

மேலும் சுவாமி உருவச்சிலைகள், சித்தமருத்துவங்கள், ஆயுள்வேத பொருட்களாகவும் மாற்றி இவ் மரங்களை பயன்படுத்துகின்றனர். இவற்றில் மிக பழமையான நீண்ட ஆயுளை கொண்ட மரங்கள் தான் கருங்காலி மரங்கள் ஆகும்.

கருங்காலி மரமும் அதன் பயன்பாடு

நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் கிரகத்திற்கு உரித்தானது கருங்காலி மரம் ஆகும்.

பழமையான பல வீடுகளில் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட உலக்கைகள் காணப்படும். இதற்கு காரணம் நம் உடலில் உள்ள சோர்வு நிலை நீங்கி உடல் ஆரோக்கியம் கிடைக்கும். அத்துடன் உறுதியானதாகவும் நீடித்த தன்மை கொண்டதாகவும் காணப்படுவதாலும் கருங்காலி மரங்களை பயன்படுத்தினர்.

கருங்காலி மரத்தின் வேர், பட்டைகளை அவித்து குடிநீராகவும், குளியல் நீராகவும் பயன்படுத்தினர். இதனால் உடலில் உள்ள பித்தம், ஒவ்வாமை, உடல் சூடு என்பன நீங்கும்.

அவற்றுடன் குழந்தை பெறுபேற்றை அடையவும், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினை, வயிற்று பிரச்சினை, நீரிழிவு பிரச்சினை போன்றவையை குறைக்கவும் கருங்காலி மரத்தின் பட்டை, வேர் என்பவை உதவுகின்றது.

அத்துடன் ஆலயங்களின் கோபுர கலசங்களிலும் கருங்காலி மரத்துண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோபுரகலசங்களின் உறுதிய தன்மை பேணமுடியும் என கூறுகின்றனர்.

கருங்காலி மாலையும் அதன் பயனும்

இன்றைய சமூகத்தினரால் அதிகம் பேசப்பட்டு வருபவை கருங்காலி மாலை என்ற கருங்காலி மரத்தில் இருந்து செய்யப்படும் ஒரு வகையான கழுத்துக்கு அணிவிக்கும் மாலை பற்றியதாகும்.

இவ் கருங்காலி மாலைக்குள் ஆன்மிகம் மற்றும் இறை நம்பிக்கையும் அதிகளவில் கொண்டு அமைந்துள்ளது. கருங்காலி மரத்தை கொண்டு தயாரிக்கப்படும் இவ் மாலையில் சிறு அளவிலான முத்து போன்ற வடிவத்தை உருவாக்கி அதனை மாலையாக உருவாக்குகின்றனர்.

அத்துடன் மணிக்கூட்டு கைகளிலும் இதை அணிவதற்கு இலகுவாக அமைக்கப்பட்டுள்ளன. இவ் மாலைகள் கறுப்பு நிறத்தில் காணக்கூடியதாக இருக்கும். ஜோதிடப்படி நூற்றியெட்டு எண்ணிக்கையிலான முத்துகளை கொண்டு மாலையாக உருவாக்குகின்றனர்.

இவ் கருங்காலி மரத்தில் நன்மைகளை அனுபவிப்பதற்காக கருங்காலி மரத்தில் இருந்து மாலைகளாக கோர்த்து கை, கழுத்து என பலரால் விரும்பி அணியப்படுகின்ற கருங்காலி மாலையின் பயன்களும் ஏராளம்.

அவையாவன வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள் விலகும், அதிர்ஷ்டமும் செல்வமும் பெருகும், கெட்ட சக்திகள் நம்மை விட்டு விலகி நல்ல சக்தி நம்மை சுற்றி காணப்படும், எடுத்தகாரியங்கள் நிறைவேறும், மாந்திரீகம், செய்வினை போன்றவை நம்மை விட்டு விலகும், வியாபாரம் தொடர்பான இலாபம், நஷ்டங்கள் சீராகும், குடும்பத்தில் மன மகிழ்ச்சி ஏற்படும் என பலரும் நம்புகின்றனர். அதன் சாத்தியக்கூறும் அதிகமாகவே உள்ளது.

கருங்காலி மாலையை எந்த ராசிக்காரர் அணியலாம்

இன்றைய காலகட்டத்தில் கருங்காலி மாலையை அனைவராலும் அணியப்படுகின்றது. ஜாதகத்தின் படி கருங்காலி மாலையை அனைவரும் அணியலாம் என கூறப்படுகின்றது.

ஆனால் மிக முக்கியமாக மேஷம், மிதுனம், விருச்சிய ராசிக்காரர்கள் அணிவதனால் மேலும் பல அதிர்ஷ்டத்தை தருகின்றது இந்த கருங்காலி மாலை என பல ஜோதிடவாதிகள் கூறுகின்றனர். அத்துடன் கருங்காலி மாலை அணிபவர்களுக்கு முருகப்பொருமானின் அருளும் கிடைக்கும்.

இவ் கருங்காலி மாலையை செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அணிவதால் திருமண பலன் கைகூடுவதால் திருமணம் ஆகாத செவ்வாய் தோஷம் உள்ளவரும் இதனை அணியலாம்.

பெண்கள், ஆண்கள் என இருபாலரும் இதனை அணியலாம். இவ்வாறு அணிவதால் குடும்ப நிலையில் ஏற்படும் சிக்கலான முரண்பாடுகள் மாற்றமடையும். குழந்தை பேறு உண்டாக நினைப்பவர்களும் இவ் கருங்காலி மாலையை அணியலாம். இதனால் மன குழப்பம் நீங்கி கணவன் மனைவிக்கு இடையிலான அந்நியோன்யம் அதிகரித்து குழந்தை பலன் கிடைக்கும்.

கருங்காலி மரத்தின் ஆயுளுக்கு ஏற்றாற் போல் அதனை பயன்படுத்தும் நமக்கும் ஆரோக்கியமான ஆயுளை தருகின்றது. இவ் கருங்காலி மரத்தின் பயன்களை அனைவரும் அடைய வேண்டும்.

கருங்காலி மாலையை அணிய நினைப்பவர்கள் முருகப்பொருமானை நினைத்து அணிந்தால் மேலும் சௌபாக்கிய சிந்தனைக்கு வழிவகுக்கும். நல்ல எண்ணங்களையும் உறுதியான மன வலிமையையும் உருவாக்க இவ் கருங்காலி மாலை உதவுகின்றது.