சுமார் 17 ஆம் நூற்றாண்டு அளவில் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு போக்குவரத்து சாதனமாகவே இந்த மிதிவண்டி காணப்படுகின்றது.
அதாவது அப்போதைய காலகட்டங்களில் மிகவும் தேவையான ஒரு போக்குவரத்து சாதனமாக இந்த மிதிவண்டிகள் காணப்பட்டன. தற்காலங்களில் மிதிவண்டிப் பாவனை வெகுவாக குறைவடைந்துள்ள போதிலும் மிதிவண்டிகளை பயன்படுத்தும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
மிதிவண்டி கட்டுரை தமிழ்
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மிதிவண்டியின் வரலாறு
- மிதிவண்டியின் நன்மைகள்
- உலக மிதிவண்டி தினம்
- மிதிவண்டியின் தீமைகள்
- முடிவுரை
முன்னுரை
ஆரம்ப காலங்களில் மனிதன் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பயணிப்பதற்காகவும் இடம் பெயர்வதற்காகவும் தன்னுடைய கால்களை பயன்படுத்தினான்.
பின்னர் குதிரை, கழுதை, மாடு போன்ற மிருகங்கள் பயன்படுத்தப்பட்டன அதற்கு பின்னர் மிதிவண்டி உருவாக்கப்பட்டதோடு பயணங்களுக்காக மிதிவண்டி பயன்பாடு மனிதர்கள் மத்தியில் அதிகமாயின.
குறிப்பாக அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை உலக மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மிதிவண்டியும் காணப்பட்டது. அந்த வகையில் நாம் மிதிவண்டி பற்றிய முக்கியமான சில தகவல்களை இக்கட்டுரையில் நோக்கலாம்.
மிதிவண்டியின் வரலாறு
ஆரம்ப காலங்களில் மனிதர்கள் தங்களுடைய பயணங்களுக்காக வெவ்வேறான கருவிகளையும், மிருகங்களையும் பயன்படுத்தி இருந்தாலும் கூட குறிப்பாக 17ம் நூற்றாண்டில் தான் மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான மிதி மண்டியின் உருவாக்கம் இடம்பெற்றது.
அதாவது 17 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “கிர்க்பாட்ரிக் மேக்மில்லன்” என்பவாரால் பொழுது போக்கிற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாக இந்த மிதிவண்டி காணப்படுகின்றது.
இவ்வாறாக கண்டுபிடிக்கப்பட்ட மிதிவண்டி ஆனது உலகின் அனைத்து நாடுகளுக்கும் பிரபல்யம் அடைந்து, அன்றிலிருந்து இன்று வரையிலும் மக்கள் மத்தியில் பயன்பாட்டில் இருப்பதையும் நாம் காண முடியும்.
மிதிவண்டியின் நன்மைகள்
மிதிவண்டி ஓட்டுவதன் மூலம் மனிதன் பல்வேறு வகையான நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றான்.
அந்த வகையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்வதற்கான அல்லது போக்குவரத்துக்கான உதவியை பெற முடிதல், உடலில் தேவையில்லாத கலோரிகளை குறைத்தல், சிறந்த உடற்பயிற்சியாக காணப்படுதல், உடல் தசைகள் வலுவடைதல், இருதய நோய், ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் குறைவடையும், உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுதல் போன்றவாறான பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன.
உலக மிதிவண்டி தினம்
மிதிவண்டிக்கு என தனியாக ஒரு நினைவு தினம் காணப்பட்டால் மாத்திரமே மிதிவண்டியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என Role of bicycle in development எனும் திட்டத்தை மேற்கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த “லெசுச்செக் சிபிலிசுக்கி” என்ற பேரசிரியர் நம்பினார்.
அதற்காக தன்னுடைய சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த வேண்டும் என பரப்புரை செய்தார்.
இதன் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு, ஐநா பொதுச் சபையின் 193 உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு வருடமும் ஜூன் மூன்றாம் தேகதி உலக மிதிவண்டி தினமாக பிரகடனம் செய்தனர்
மிதிவண்டியின் தீமைகள்
மிதிவண்டியை செலுத்துவதன் மூலம் மனிதர்கள் பல்வேறு வகையான நன்மைகளை பெற்றுக் கொள்வதை போலவே, தொடர்ந்தும் அதிகமாக மிதிவண்டியை பயன்படுத்தும் போது சில தீமைகளும் மனிதர்களுக்கு வந்து சேர்கின்றன.
அந்த வகையில் கால்,மூட்டு, எனபுகள் தேய்வடைதல், உடல் உஷ்ணம் அதிகரித்தல், உடலில் நீர் சத்து குறைவடைதல் மற்றும் வறட்சி நிலை ஏற்படுதல், தசைகள் வேகமாகவும் வெகுவாகவும் தளர்ச்சி அடைதல், முதுகென்பு பலவீனமடைதல் போன்றவாறான உடலில் ரீதியான சில தீமைகளையும் இந்த தொடர்ச்சியான மிதிவண்டி பாவனை மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்றது.
முடிவுரை
எளிமையான மற்றும் நிலையான ஒரு போக்குவரத்து சாதனமாக இந்த மிதிவண்டி காணப்படுகின்றது. அத்தோடு மனிதனின் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காத போக்குவரத்து சாதனமான மிதிவண்டி ஆனது உடல் சுறுசுறுப்புக்கு இன்றியமையாத ஒரு உடற்பயிற்சியாகவும் காணப்படுகின்றது.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் மிதிவண்டியின் முக்கியத்துவத்தினை உணர்ந்து அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை கவனத்தில் கொண்டு இந்த போக்குவரத்து சாதனத்தை நாமும் பயன்படுத்துவது எமக்கு நன்மையாகவே அமையும்.