இலங்கைக்கு இன்றைய வெளிநாட்டு தொடர்பிலான நடவடிக்கைக்கு காரணமாக இருந்தது பொதுநலவாய அமைப்பாகும். பிரித்தானியரும் ஏனைய நாடுகளின் கூட்டமைப்பில் உருவானதே பொதுநலவாய அமைப்பு ஆகும்.
பொதுநலவாய அமைப்பும் இலங்கையும்
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பொதுநலவாய அமைப்பு என்பது
- பொதுநலவாய அமைப்பில் உள்ள நாடுகள்
- பொதுநலவாய அமைப்புடன் இணைக்கப்பட்ட இலங்கை
- பொதுநலவாய அமைப்பினால் இலங்கைக்கு கிடைக்கும் அனுகூலங்கள்
- முடிவுரை
முன்னுரை
பிரித்தானிய நாடு தனது ஆதிக்கத்தில் இருந்த நாடுகளை விடுதலை செய்ததன் பின் அந்த நாடுகளுடன் சேர்ந்து ஓர் கூட்டமைப்பை உருவாக்கியது. அந்த கூட்டமைப்பை பொதுநலவாய அமைப்பு என அழைத்தனர். அந்த அமைப்புடன் சேர்ந்து இலங்கையின் தொடர்புகளை இக்கட்டுரையில் நோக்கலாம்.
பொதுநலவாய அமைப்பு என்பது
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு பொதுநலவாய அமைப்பு ஆகும். இதன் தலமையகம் லண்டனில் மார்ல்பரோ மாளிகையில் அமைந்துள்ளது.
பிரித்தானிய நாடு இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தில் இருந்த காலப்பகுதியில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளை பிரித்தானிய நாடு விடுதலை செய்தது.
அதன்பின் விடுதலை அடைந்த நாடுகளுடன் ஒரு கூட்டணியை மேற்கொள்ள தீர்மானித்த பிரித்தானிய நாடு 1949ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பு என்ற அமைப்பை தொடங்கி அவ் நாடுகளுக்கு இடையே தொடர்புகளை வலுப்படுத்தி கொண்டது.
பொதுநலவாய அமைப்பில் உள்ள நாடுகள்
பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற நாடுகள் பொதுநலவாய அமைப்பில் அங்கத்தவர்களாக காணப்படுகின்றனர். இந்த பொதுநலவாய அமைப்பில் மொத்தமாக ஐம்பத்தி நான்கு நாடுகள் உள்ளன.
அவையாவன ஆன்டிகுவா- பார்புடா, அவுஸ்திரேலியா, பஹாமா, வங்களாதேசம், பார்படோஸ், பெலிஸ், பொட்ஸ் வானா, புரூனே, கெமருன், கனடா, சைப்பிரஸ், டொமினிகா, பிஜி, காம்பியா, கானா, கிரீனீடா, கயானா, இந்தியா,ஜமைக்கா, கென்யா, கிரிபாடி, லெசத்தோ, மாலவி, மலேசியா, மாலைதீவுகள், மால்டா, மொரிசியஸ்,
மொசாம்பிக், நமிபியா, நப்ரு, நியூசிலாந்து, நைஜிரியா, பாகிஸ்தான், பப்புவா நீயுகய்னியா, செயின்ட் கிட்ஸ் அன் நெயிட்ஸ், செயின் லூசியா, செயின்ட வின்செட் அன்ட் இரிநாட்டில், சமோவா, கிகில்லிஸ், சியர்ரா லியோன், சிங்கப்பூர், கலமன் தீவுகள்,
தென்ஆபிரிக்கா, இலங்கை, சுவாசிலாந்து, தான்சானியா, டோங்கா, ட்ரினிடாட், அன்ட் டொபாக்கோ, டுவாலு, உகாண்டா, இங்கிலாந்து, வணுவாட்டு, ஸாம்பியா என்பனவாகும்.
பொதுநலவாய அமைப்புடன் இணைக்கப்பட்ட இலங்கை
சிறிய நாடாக இருந்த இலங்கை நாட்டின் வளர்ச்சிக்கு கண்டிப்பாக வெளிநாட்டு தொடர்பு காணப்படுவது மிக அவசியமான ஒன்றாக இருந்தது.
அப்பொழுது பொதுநலவாய அமைப்புடன் சேர்வதற்கான வாய்ப்பை பிரித்தானிய நாடு ஏற்படுத்தி கொடுத்தது இதன் மூலம் வெளிநாட்டு தொடர்பை ஏற்படுத்தி கொள்ள இலகுவான வழி கிடைத்தது.
இதற்கு காரணம் இலங்கை ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் நூற்றைம்பது ஆண்டுகள் இருந்தமையால் பொதுநலவாய அமைப்பில் இலங்கையும் அங்கத்துவ நாடாக உள்ளடக்கப்பட்டது.
இந்த பொதுநலவாய அமைப்பின் பல முக்கியமான மாநாடுகள் இலங்கையிலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவற்றில் பொதுநலவாய அமைப்பின் 23வது மாநாடு பல நாடுகளின் எதிர்ப்பை தாண்டி இலங்கையில் கொழும்பில் நடத்தப்பட்டது.
பொதுநலவாய அமைப்பினால் இலங்கைக்கு கிடைக்கும் அனுகூலங்கள்
பொதுநலவாய அமைப்பின் குறிக்கோள்களாக மனித உரிமைகளை பாதுகாத்தல், நல்லாட்சியினை நாட்டுக்கு வழங்கல், நாட்டின் சட்டதிட்டங்களை வலியுறுத்தல், தனிமனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், மனித சமூக சமத்துவத்தை பேணி பாதுகாத்தல், சீரான வர்த்தக நடவடிக்கைகளை வழங்க உதவி செய்தல், உலக சமாதானத்தை நிலை நிறுத்தல் என்பதாகும்.
இவற்றை மையமாக கொண்டு இலங்கை நாட்டில் ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு பொதுநலவாய அமைப்பும் அதன் அங்கத்துவ நாடுகளும் உதவி செய்தது.
முடிவுரை
இலங்கை பொதுநலவாய அமைப்புடன் இருந்தமையால் இப்பொழுது வளர்ச்சி அடைந்து வரும் நாடு என்ற பட்டியலில் காணப்படுகின்றது. காரணம் பொதுநலவாய அமைப்பின் குறிக்கோள் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமான ஒன்றாக அமைந்தமையால் ஆகும்.
அத்துடன் ஏனைய நாடுகளும் பொதுநலவாய அமைப்பினால் அதிகம் நன்மை அடைவதுடன் இலங்கையின் வளர்ச்சிக்கும் ஆதரவாகவும் உள்ளனர்.