சரிவிகித உணவு என்றால் என்ன

sari vikitha unavu in tamil

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு வகையான போசணைக் கூறுகளை உள்ளடக்கியது என்றவகையில் நாம் இன்று ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிவகுப்பதொன்றாக உணவுகள் காணப்படுகின்றன.

அந்தவகையில் நாம் உண்ணும் உணவினை அளவாக உண்பதானது சிறப்புமிக்கதொன்றாகும். ஏனெனில் அளவிற்கு அதிகமாக ஒரு உணவை எடுத்துக் கொண்டாலோ அல்லது மிகவும் குறைவாக உணவுகளை எடுத்துக்கொள்வதாலேயோ இன்று பலர் பல நோய்களுக்கு ஆளாகியே வருகின்றனர்.

சரிவிகித உணவு என்றால் என்ன

சரிவிகித உணவு என்பது யாதெனில் நாம் உண்ணக்கூடிய உணவில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் காணப்படுவதாகும் எனலாம். அதாவது விட்டமின்கள், கார்போவைத்திரேட், கனியுப்புகள், புரதம், கொழுப்பு என அனைத்து விதமான போசணைக் கூறுகளையும் கொண்டமைந்ததாக காணப்படும்.

இன்று பலர் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறியாது சுவைக்காக மட்டுமே உணவினை உட்கொண்டு வருகின்றனர். இதனால் இன்று சர்க்கரை நோய், இதய நோய் உடற்பருமன் என பல்வேறு வகையான நோய்களுக்கு ஒவ்வொருவரும் ஆளாகிக் கொண்டு வருகின்றனர்.

இந்த சரிவிகித உணவை நாம் எடுத்துக் கொள்வதன் ஊடாகவே எமது உடல் வலுப்பெறுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறுபட்ட நோய்களிலிருந்தும் எம்மை காக்கின்றது.

சரிவிகித உணவின் நன்மைகள்

சரிவிகித உணவை நாம் உண்கின்றபோது பல்வேறு வகையான நன்மைகள் வந்தடைவதனை காணக்கூடியதாக உள்ளது.

அந்த வகையில் நாம் சரிவிகித உணவை தினமும் உட்கொள்ளும் போது எமது உடலானது ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் சுறுசுறுப்பாகவும் இயங்கும். மேலும் அன்றாட நடவடிக்கைகளை சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொள்ளவும் இவ் உணவு முறைமையே உதவுகின்றது.

அதுபோன்றே நாம் தினமும் உண்ணும் பழங்கள், காய்கறிகள் போன்றவை எமது மூளை வளர்ச்சிக்கு பாரியதொரு பங்களிப்பினையே செய்து வருகின்றது எனலாம்.

அத்தோடு நோயில்லாமல் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கான அடித்தளத்தினையும் இவ் உணவு முறைமையே எமக்களிக்கின்றதோடு எமது உடலை மாத்திரமல்லாது மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.

மேலும் ஞாபக சக்தி அதிகரிப்பு மற்றும் நற்சிந்தனை என பல்வேறுபட்ட நன்மைகளை தன்னகத்தே கொண்டமைந்து காணப்படுவதானது சரிவிகித உணவின் முக்கியத்துவத்தினை பறைசாற்றுகின்றது.

பாரம்பரிய உணவு முறையும் சரிவிகித உணவும்

இன்று காணப்படும் உணவு முறைகளைப் போலல்லாது பாரம்பரிய உணவு முறையானது சரிவிகித உணவு முறையை அடியொட்டியதாகவே அமைந்துள்ளது. அந்த வகையில் பாரம்பரிய உணவு முறைகள் அதிக ஊட்டச்சத்துக்களை எமக்களிக்கக்கூடியதொரு உணவுகளாகும்.

அதாவது ஆரம்ப காலப்பகுதிகளில் உணவுகளானவை சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள் என பல சத்துக்கள் உள்ளடக்கியதாகவே காணப்பட்டதோடு உணவே மருந்து என்ற அடிப்படையிலேயே தான் மூன்று வேளைகளிலும் உட்கொள்ளப்பட்டு வந்தன.

மேலும் பாரம்பரிய உணவாக அரிசி காணப்படுவதோடு அதனை அடியொட்டியதொரு உணவாகவே புரத உணவுகள் காணப்பட்டன.

அத்தோடு அக் காலப்பகுதிகளில் சாமை, வரகு, திணை என பல்வேறு கனியுப்புகளை உள்ளடக்கிய உணவுகள் உட்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அக் காலப்பகுதிகளில் சரியான விகிதத்தில் உணவுகள் அமைந்து காணப்பட்டமையால் நோயின்றி சிறப்புறவே மக்கள் வாழ்ந்து வந்தனர்.

ஆரோக்கியத்தை அழிக்கும் இன்றைய உணவுப் பழக்கம்

இன்று மனிதர்கள் உண்ணுகின்ற உணவுகளானவை மனிதர்களை பல்வேறு நோய்களுக்கே இட்டுச் செல்கின்றன. அந்த வகையில் அதற்கான பிரதான காரணங்களில் ஒன்றே சரிவிகித முறையில் உணவினை உட்கொள்ளாமை ஆகும். இன்று பலர் ஆரோக்கியமற்ற துரித உணவினையே பிராதனமாக உண்டு வருகின்றனர்.

அதுபோன்றே கண்களுக்கு கவர்ச்சி அளிக்கும் சத்துக்களற்ற உணவிலேயே அதிக நாட்டத்தினை கொண்டுள்ளதோடு இன்று கடைகளிலிலும் இவ்வாறான உடல் ஆரோக்கியத்தை அழிக்கும் உணவுகளையே அதிகளவில் விற்பனை செய்தும் வருகின்றனர்.

அதாவது இன்று உணவில் பல்வேறு இரசாயன பதார்த்தங்களை சேர்க்கின்றதோடு சுவைக்காகவும், அதன் தரத்தினை உயர்த்துவதற்காகவும் செயற்கையான பல சுவையூட்டிகளை கலந்து வருகின்றனர். இதன் காரணமாகவே இன்று பலர் குறுகிய காலப்பகுதியில் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி மரணிக்கின்றனர்.

எனவே தான் இத்தகைய உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியத்தை பேணும் சரிவிகித உணவை உட்கொள்ளல் வேண்டும்.

மேலும் சரிவிகித உணவின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் விதமாக விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதன் மூலமும் இவ் முறையற்ற உணவுப் பழக்கவழக்கத்தில் இருந்து அனைவரையும் காத்துக்கொள்ள முடியும் என்றவகையில் ஊட்டமிக்க உணவே எம் வாழ்விற்கான அடித்தளமாகும்.

இறந்தவர்களின் படத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்