காண்போரை கவரும் சிகிரியா கட்டுரை

sigiriya katturai in tamil

சுற்றுலா தளங்களின் வரிசைகளில் இலங்கைத்தீவும் தனக்கென ஓர் இடம் பதித்துள்ளது. அழகிய கண்கவரும் அதிசய இலங்கைத் தீவில் அற்புதங்களுக்கு எல்லாம் அற்புதமாக சிகிரியாவை கூறலாம்.

காண்போரை கவரும் சிகிரியா கட்டுரை

முன்னுரை

கடலால் சூழப்பட்ட அழகிய தீவுகளில் இலங்கையின் அமைவிடம் அதிகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வல்லமை கொண்ட தீவாக காணப்படுகின்றது. இலங்கை தீவு பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகவே கலை, கலாசார, தொழிநுட்பங்கள் சார்பான பல தொல்பொருள் ஆவணங்களை கொண்டு அமைந்த தீவாகவே காணப்படுகின்றது.

பறவைகள், விலங்குகள், அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், தேயிலை தோட்டங்கள், கறுவா, இறப்பர் தோட்டங்கள், வாசனை திரவியங்கள், இரத்தினகற்கள், யானை தந்தங்கள், காடுகள், மலைகள், இயற்கை துறைமுகங்கள், கடற்கரைகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், மலைத்தொடர்கள் என இலங்கை தீவுற்கு என தனித்துவமான பல இயற்கை அரண்களை மட்டும் கொண்டு அமைந்த சிறிய தீவு இலங்கை தீவு ஆகும்.

இலங்கை தீவின் மொத்த சிறப்பையும் சிகிரியா என அழைக்கப்படும் ஒரு பழமையான இரசதானி மூலம் அறிந்து கொள்ள முடியும்.

சிகிரியா அமைவிடம்

இலங்கை நாட்டில் அதாவது இலங்கை தீவில் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை எனும் ஊரில் குன்று ஒன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள கோட்டை சிகிரியா எனப்படுகின்றது. இன்று இது இலங்கையின் சுற்றுலாதலங்களில் ஓர் மையப்புள்ளியாக அமைந்துள்ளது.

சிகிரியா கட்டப்பட்டதன் நோக்கம்

இலங்கை தீவில் மன்னராட்சி நிகழும் பொழுது கி.பி 5ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் தாதுசேன மன்னனால் ஆட்சி செய்யப்பட்ட இராச்சியம் அநுராதபுர இராசதானி என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

தாதுசேனனின் மகன்கள் இரண்டாவது மனைவியின் மகன் முதலாம் காசியப்பனும் பட்டத்து ராணியின் மகன் முகலனும் ஆவார்கள்.

அடுத்த ஆட்சி பொறுப்பில் ஏற்பட்ட முரண்பாடால் தனது தந்தையை கொன்ற காசியப்பன் முகலனிடம் இருந்து தப்பித்து கொள்ளவும் புதிய இராசதானியை அமைத்து கொள்ளவும் இந்த சிகிரியா குன்றை அமைத்தான் காசியப்பன் என அங்குள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிகிரியாவின் தோற்றம்

சிகிரியாவை சிங்க பாறை என்ற பெயர் கொண்டும் அழைக்கப்படுகின்றது. இதற்கு காரணம் சிகிரியா குன்றின் தோற்றம் சிங்கம் அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தில் காணப்படும். சிகிரியா குன்றின் உள் செல்லும் பாதை அருகே சிங்கத்தின் இரு பாதங்கள் போன்று பாறைகளில் செதுக்கியுள்ளனர்.

மேலும் சிகிரியா குன்றின் உச்சிக்கு செல்வதற்கான படிக்கட்டு பாதைகளும், அதனை ஒட்டி பளிங்கு சுவர் அல்லது கண்ணாடி சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. அதனில் பல சுவடுகளையும், எழுத்துக்களையும் காண முடிகின்றது.

கோட்டையின் மேல் நீர்தடாகமும், அரசமாளிகை, குளம், கற்பூங்காக்கள், நீர்பூங்காக்கள், அகழிகள் என தொழிநுட்பத்தை மிஞ்சிய கட்டட பரிமாணங்களை இங்கு காண முடிகின்றது.

சிகிரியா ஓவியங்களின் விளக்கங்கள்

சிகிரியாவில் மாபெரும் அறிவியலுக்கு எட்டாத பல சர்ச்சைகளை ஏற்படுத்திய பல கருத்து வேறுபாடுகளை உருவாக்கிய விடயம் சிகிரியாவின் மேற்பரப்புகளில் வரையப்பட்ட ஓவியங்கள் ஆகும்.

இவ் ஓவியத்தின் தெளிவான கருத்துக்களை முன் வைக்க முடியவில்லை என்றாலும் இன்றைய சித்திரகலையின் ஆணிவேராக காணப்படுகின்றன. இவற்றை இந்தியா நாட்டின் அஜந்தா ஓவியங்களுக்கு ஒப்பிட்டு கூறப்படுகின்றது.

இந்த ஓவியங்கள் அனைத்தும் பெண்களை மையமாக கொண்டு வரையப்பட்டுள்ளன. இவ் ஓவியங்கள் 500 வரையப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டுகள் குறிக்கின்றன. ஆனால் தற்போது 22 ஓவியங்களுக்கு குறைவாகவே காணப்படுகின்றது.

இவ் ஓவியங்கள் தனி தனி பெண்கள் ஓவியமாகவும் சோடி சோடியான பெண்களின் ஓவியங்களாகவும் காணப்படுகின்றன. அத்துடன் அந்த மங்கையர்களின் கைகளில் பூத்தட்டுகளையும் பூங்கொத்துக்களையும் கொண்டு உள்ளனர்.

அந்த ஓவியம் மங்கையர்களின் இடுப்புக்கு மேற்பட்ட உருவமும் இடுப்பு கீழ் மேகங்களை போன்றும் உருவமைப்பையும் கொண்டு வரையப்பட்டுள்ளது. மங்கையர்களின் அணிகலன்களும் ஆபரணங்களும் அவர்களின் முக பாவனைகளும் என அனைத்தையும் அழகாக செதுக்கி வடிவமைத்துள்ளனர்.

இவ் ஓவியங்களை நீலம், மஞ்சள், சிவப்பு, பச்சை என பல வர்ணங்களாலும் தீட்டப்பட்டுள்ளது. இவ் நிறத்திற்கு பழமையான மரத்தூள், பச்சிலைகள், சுண்ணாப்பு கலவைகள், களிமண்கள் கலவை என பயன்படுத்தி உள்ளனர் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இவற்றின் மூலம் காசியப்ப மன்னன் சிறந்த கலை உணர்வு மிக்கவர் என்பதை அறிய முடிகின்றது.

முடிவுரை

இவ் அழகிய இலங்கை தீவின் மிக விசாலமாக அமைந்துள்ள சிகிரியாவை பார்ப்பவர் கண்களை கண்டிப்பாக கவரும் என்பதை சுற்றுலா பயணிகளே குறிப்பிட்டு கூறியுள்ளனர்.

இதன் அழகை தாண்டி பல தொழிநுட்ப அறிவையும் கட்டுமானபணிகளையும் இங்கு காணமுடிகின்றது. எனவே இது இலங்கையின் மிக புராதனமான பொக்கிஷங்களில் ஒன்றாக உள்ளது.

எமது நாடு இலங்கை கட்டுரை