சுற்றுலா நாடுகளில் பெயர் சொல்லும் பட்டியலில் இலங்கையும் ஒரு இடத்தை பிடித்துள்ளது. இலங்கை நாட்டின் சுதந்திர தினம் பெப்ரவரி மாதம் 2ம் திகதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது.
இலங்கை சுதந்திர தினம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சுதந்திரத்திற்கு முன் இலங்கை
- இலங்கை சுதந்திர தினம்
- சுதந்திர போராட்ட தலைவர்கள்
- சுதந்திரத்தின் பின் இலங்கை
- முடிவுரை
முன்னுரை
நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட இலங்கைத்தீவு இயற்கை அரண்களை கொண்ட நாடு ஆகும். ஆசியக்கண்டத்தில் அமைந்துள்ள அழகிய சொர்க்கபுரி நம் இலங்கை.
இன்று இலங்கை சுற்றுலாவிற்கான பிரசித்தி பெற்ற ஒரு நாடாக மாறியுள்ளது. ஆனால் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலயரின் அடிமைப்படுத்தலுக்கு கீழ் இலங்கை காணப்பட்டது.
ஆங்கிலேயரிடம் இருந்து எமது இலங்கை நாடு சுதந்திர இலங்கையாக மாறிய வரலாறையும் மாற்றிய மாவீரர்களையும் இக்கட்டுரையில் நோக்கலாம்.
சுதந்திரத்திற்கு முன் இலங்கை
மன்னராட்சியின் அன்றைய கால இலங்கை வர்த்தகத்திற்கும் வணிகத்திற்கும் பெயர் போன நாடாக இருந்தது. இதனை ஆங்கிலேயர் அறிந்து கொண்டு இலங்கை வளங்களையும் இலங்கை மக்களையும் அடிமைப்படுத்த நினைத்தனர்.
போர்த்துகேயர், ஒல்லாந்தர் வரிசையில் இரண்டாம் இராஐ சிங்க மன்னனால் இலங்கைக்கு அழைக்கப்பட்டவர்கள் ஆங்கிலேயர்கள். இதற்கு பழைய நூல்களில் ஒல்லாந்தரை விரட்டுவதற்கு ஆங்கிலேயரிடம் உதவி கேட்டுள்ளார் எனவும் இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கினார் எனவும் இரண்டாம் இராஜசிங்க மன்னனை விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் வருகையின் பின் மன்னராட்சியை முடிப்பதற்காக ஆங்கிலயர்கள் பல உத்திகளை கையாண்டார்கள்.
அவற்றில் சில இலங்கை மக்களுக்கான கல்வி அறிவை வழங்குதல், உணவு பொருட்கள் வழங்குதல் போன்றவற்றின் ஊடாக மக்களிடம் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டனர். மன்னரிடம் நட்புறவை பேணுவதற்காக விலை உயர்ந்த மதுபானங்கள் போன்றவற்றை பரிசளித்தனர்.
இவற்றிற்கு அடிமையான இலங்கை நாட்டு மன்னர் நாட்டு நலனில் அக்கறை இன்றி இருந்தனர். இதன் விளைவாக நாட்டின் அக்கறை அற்ற மன்னன் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. மன்னருக்கு எதிராக மக்களும் பிரதானிமார்களும் செயற்பட்டனர். இதனை அடுத்து மன்னரை சிறைப்பிடித்து பிரித்தானிய நாட்டுக்கு இழுத்து செல்லப்பட்டது. அதன் பிறகு இலங்கையை ஆங்கிலேயர் கைப்பற்றி கொண்டனர்.
பின் தங்கள் எண்ணப்படி மக்களை அடிமையாக்கி இலங்கையின் வளங்களை ஏற்றுமதி செய்தார்கள். அத்துடன் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி குறைந்த சம்பளமும் வழங்கினார்கள். இந்திய நாட்டு மக்களையும் குறைந்த சம்பளத்திற்கு நாட்டுக்குள் வரவழைக்கப்பட்டது. இவ்வாறு இலங்கை மக்களை மிக கொடுரமாக நடத்தினார்கள்.
இலங்கை சுதந்திரம் பெற்ற தினம்
ஆங்கிலேயரின் கொடுமைகளை பொறுத்து கொள்ள முடியாத மக்கள் தமக்குள் பல தலைவர்களுடன் சேர்ந்து இலங்கை நாட்டை 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஆங்கிலயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட செய்தனர். இந்த நாளை இலங்கையின் சுதந்திர தினமாக இலங்கைவாசிகளால் கொண்டாடப்படுகின்றது.
ஒவ்வொரு வருட சுதந்திர தினத்திற்கும் முப்படைகளின் வீரத்தை காட்டும் நாளாகவும் சுதந்திர தினம் காணப்படுகின்றது. தேசிய கொடியை ஏற்றி தேசிய கீதம் பாடி மரியாதை செய்யப்பட்ட பின் தலைவர்களின் உரை ஏற்படும்.
பல் கலாசாரம் கொண்ட நாடு என்பதனால் ஒவ்வொரு கலாசாரத்தின் கலைகளும், சிறப்பியல்புகளையும் நடனம், பாடல், நாடகம் போன்ற வடிவில் வெளிப்படுத்துவார்கள். பட்டாசுகளும் வெடித்தும் கொண்டாடுவார்கள்.
சுதந்திர போராட்ட தலைவர்கள்
சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இன, மத வேற்றுமை இன்றி ஒன்றாக செயற்பட்டு இலங்கைக்கு சுதந்திரம் பெற்று கொடுத்துவர்கள் நம் நாட்டு தலைவர்கள் ஆவார்கள். அவர்களின் ஒவ்வொரு வாதங்களும் புரட்சிகளும் தான் நமக்கான இன்றைய சுதந்திர இலங்கையாக மாறியுள்ளது.
அந்த வகையில் போராட்ட தலைவர்களாக ஆறுமுக நாவலர், சேர்.பொன் இராமநாதன், C.W.W கன்னங்கரா, ஆனந்த குமாரசாமி, கலாநிதி டி.பீ ஜாயா, சேர்.டி.பீ ஜயதிலக்க, வண. எஸ் மகிந்த, கொங்காலேகொட பண்டா, ஆதர். சி. கிளாக், மெனராவில கப்பெட்டிபொல திஸ்ஸவ, டி. எஸ். சேனநாயக்க, அனகார தர்மபால, அறிஞர் எம்.சி.சித்திலெவ்வை, S.W.R.D.பண்டாரநாயக்க போன்றவர்களை குறிப்பிடலாம்.
சுதந்திரத்தின் பின் இலங்கை
இலங்கை சுதந்திரம் அடைந்த பின் ஜனநாயக முறை ஆட்சி இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் விளைவாக பல கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டது. அத்துடன் அரசியல் தொடர்பான சீர்திருத்தங்களும் உருவாக்கப்பட்டது.
அவையாவன சோல்புரி யாப்பு, 1972 முதலாம் குடியரசு யாப்பு, 1978 இரண்டாம் குடியரசு யாப்பு என்பவையாகும். அதன் பின் ஒன்பது மாகணங்களாக இலங்கையை பிரித்து ஆட்சி செய்யப்பட்டது.
கல்வி தொடர்பில் இலவசமான கல்வி அனைத்து மாணவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற திட்டம் C.W.W கன்னங்கரா அவர்களால் கொண்டுவரப்பட்டது. மனித உரிமைகள், பாதுகாப்பு, அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக சட்டங்களும் கொண்டுவரப்பட்டது. இன்னும் பல நிதி, நீதி என நாட்டை பலப்படுத்தும் அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
முடிவுரை
இன்றைய இலங்கை நாட்டை உருவாக்குவதற்காக பாடுபட்ட தலைவர்களுக்கும் இன்று எமது சுதந்திர இலங்கையை பாதுகாக்கும் வீரர்களுக்கும் நன்றிகள் சொல்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
பல வேற்றுமைகள் இலங்கை நாட்டில் காணப்படுகின்ற போதும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணம் என்றும் மாறாது. நம் ஒற்றுமை தான் நாட்டில் பலம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.