இயற்கைப் பேரிடர் என்பது இயல்பு. இவைகளைத் துல்லியமாகக் கணிக்கவோ தடுக்கவோ இயலாது. இதனால் ஏற்படும் மற்ற மற்ற விளைவுகளை எவ்வாறு குறைப்பது என்பதே இன்று நம்முன்னுள்ள சவாலாகும்.
சூறாவழி, காற்றழுத்தத் தாழ்வுமண்டலம், நிலநடுக்கம், பருவ கால வெள்ளங்கள், நிலச்சரிவுகள், மண்ணரிப்பு, காட்டுத் தீ போன்ற பல இயற்கை அழிவுகளை உலக மக்கள் எதிர்கொண்டு வருவதனை காண்கின்றோம்.
நகர்புற மக்கட் தொகைப் பெருக்கத்தினாலும், மனிதனால் கட்டப்பட்ட மோசமான கட்டிடங்களாலும் நகரங்களில் அதிகளவு மனித இனத்திற்கும் உடமைகளுக்கும் நிலநடுக்கங்களாலும் மற்றும் பிற இயற்கைப் பேரழிவு நிகழ்வுகளினாலும் இன்னல்கள் ஏற்படுகின்றன.
தேசிய பேரிடர் என்றால் என்ன
தேசிய பேரிடர் என்பது மக்களைப் பாதிக்கக்கூடிய பேரழிவு ஒரு நாடு முழுவதும் ஏற்பட்டால் அதனைத் தேசிய பேரிடராக கூறலாம். எனினும் இதனை குறித்த நாட்டின் சம்மந்தப்பட்ட அரசுகள் தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்.
இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்த இடத்தினை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தப்படும். மாநிலத்தில் வகிக்கும் மொத்த மக்கள் தொகையில் 6% பேர் பாதிக்கப்பட்டால் தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கும். அவ்வாறு அறிவித்தால் உடனடியாகக் கூடுதல் பேரிடர் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும்.
இந்தியாவில் ஏற்படக்கூடிய உயிரியல் இரசாயன அணுசக்தியாக்கம் முதலான எல்லா வகையான பேரிடர்களையும் சமாளிக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ஆணையகம் தேசியபேரிடர் ஆணையகம் ஆகும்.
1999 ல் பேரிடர் மேலாண்மையை தேசிய முன்னுரிமையாக அங்கீகரித்து Hight Powered
Committee இந்திய அரசாங்கம் அமைத்தது. அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு குஐராத் பூகம்பத்தின் பின் பேரிடர் மேலாண்மைத் திட்டமிடல் குறித்தும் தடுப்பு முறைகள் குறித்தும் தேசிய குழுவொன்று அமைக்கப்பட்டது. எனினும் 2005 ஆம் ஆண்டிலேயே சட்டமாகக் கொண்டு வரப்பட்டது.
பேரிடர் மேலாண்மைக்கான தேசிய கொள்கை பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் படியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தேசிய மாநில மற்றும் மாவட்டம் என மூன்று நிலைகளில் நிறுவப்பட்டுள்ளது.
பேரிடரின் வகைகள்
பேரிடர்களை இயற்கையாக ஏற்படக் கூடியவை, செயற்கையாக ஏற்படக் கூடியவை என இரண்டாக வகைப்படுத்துகின்றனர்.
நிலநடுக்கம், வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, புயல், வெப்பம், வறட்சி,மின்னல் மற்றும் இடி போன்றவற்றை இயற்கைப் பேரிடர் வகைப்பாட்டிற்குள் அடங்கும்.
சாலை விபத்துக்கள் பயங்கரவாதத் தாக்குதல்கள் அணுகுண்டு வெடிப்பு அணுக்கதிர்வீச்சு போன்றவை செயற்கையான பேரிடர் வகைக்குள் அடங்கும்.
தேசிய பேரிடராக அறிவிப்பதன் நன்மைகள்
தேசிய பேரிடர் அறிவிப்பானது தேசிய பேரிடர் நிவாரணத்தைப் பெற்றுத் தரும். பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசின் உத்தரவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதனைப் பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும். தமது உறவுகளையும், உடமைகளையும் பாதுகாப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கின்றது.
அரசு மக்களுக்கு முகாம் அமைத்துக் கொடுக்கும் இதனால் தேசிய பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்குமிட வசதி கிடைக்கின்றது. தேசிய பேரிடர் மீட்புப் படைகளின் உதவி கிடைக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.