திருவாதிரை என்றால் என்ன

thiruvathirai endral enna

ஆதியும் அந்தமுமில்லாப் பரம்பொருளான சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். நட்சத்திரங்களில் நான் திருவாதிரை என்று கிருஷ்ணபரமாத்மா கூறியிருக்கின்றார். அந்தளவு மகத்துவம் வாய்ந்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும். திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் என்பது கூடுதல் சிறப்பாகும்.

தமிழில் திருவாதிரை என அழைக்கப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர் இந்த பெயரே “ஆருத்ரா” எனப்படுகின்றது. ஆருத்ரா என்ற வடமொழிச் சொல் தமிழில் ஆதிரை என அழைக்கப்பட்டது. அதனுடன் திரு என்ற அடைமொழி சேர்த்து திருவாதிரை எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

மார்கழி மாதம் பௌர்ணமியுடன் திருவாதிரை நட்சத்திரம் கூடிவரும் நாளன்று திருவாதிரை ஆருத்ரா தரிசனம் என்று வெகு விமர்சையாகக் கொபண்டாடப்பட்டு வருகின்றது.

திருவாதிரை நோன்பு

திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் விரதம் இருந்து நோற்கும் நோன்பாகும்.

வரலாறு

ஆருத்ரா தோன்றியதற்கு நான்கு வரலாறு உண்டு. வரலாறு 1: தாரகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெரும் வேள்வியை நடத்தி வந்தனர். சிவபெருமான் பிச்சாடனாகார் வேடம் பெற்று பிச்சை எடுக்க முனிவர்களது இல்லங்களுக்குச் சென்றார்.

முனிவர் மனைவியர்கள் தம்மை மறந்து பிச்சாடனான சிவபெருமான் பின் சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயல்கள், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பனவற்றை தோற்றுவித்து சிவபெருமான் மீது ஏவினர்.

சிவபெருமான் மதயானை கொன்று அதன் தோலை அணிந்தார். மற்றவற்றைத் தானே தரித்துக்கொண்டு முயல்கள் மீது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி நடனமாடி முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்ரா தோன்றியதற்கான வரலாறுகளில் ஒன்றாகும்.

வரலாறு 2: பாற்கடலில் பள்ளி கொண்ட ஸ்ரீ மகாவிஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திழைத்திருந்தார். அதைக் கண்ட ஆதிசேஷர் தங்களது ஆனந்தத்திற்கு என்ன காரணம் என்று கேட்க நாராயணரே ஆடல் வல்லான் சிவபெருமான் திருவாதிரை நாள் அன்று நடராஜராக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்கு காரணம் என்றார். நாராதயணனையே மகிழ்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண ஆதிசேஷனுக்கு அவா அதிகமாகியது.

தன்னுடைய ஆசைகளை மகாவிஷ்ணுவிடம் கூற அவரை ஆதிசேஷனுக்கு ஆசி அளித்து அனுப்பினார். ஆதிசேஷன் பூலோகத்திற்கு பதஞ்சலி முனிவராக அவதரித்தார். ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் உருக் கொண்டு பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார்.

ஆதிசேஷன் பூலோகத்தில் தவம் இருந்தார். பல ஆண்டு காலமாக தவம் செய்தார். தவம் நிறைவுபெறும் காலம் வந்தது. இவ்வாறு தவம் செய்து கொண்டிருக்கையில் பதஞ்சலி முனிவர் முன் சிவபெருமான் தோன்றி திருக்காட்சி அளித்தார். அவரை நமஸ்காரம் செய்து வணங்கினார்.

பதஞ்சலி முனிவரிடம் சிவபெருமான் “என்னைத் தவம் செய்த நோக்கம் போலவே வியாக்கியவாதரும் என்னை நோக்கி தவம் செய்து காத்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் இருவரும் தில்லை வருவீராக! உங்களுக்கு யாம் திருத்தாண்டவர் திருக்காட்சியை காட்டி அருள்வோம்” எனக்கூறி விட்டு மறைந்தார்.

பதஞ்சலி மற்றும் வியாக்கியவாத முனிவர் இருவரும் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். அங்கு இரு முனிவர்களும் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை கண்டு மகிழ்ந்தனர். இதுவே ஆருத்ரா தோன்றிய மற்றுமொரு வரலாறு ஆகும்.

வைகுண்ட ஏகாதசி என்றால் என்ன