நாம் வாழக்கூடிய உலகானது காலங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட வண்ணமே உள்ளது. இந்த வகையில் அறிவியல் வளர்ச்சியானது பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகை செய்வதாக காணப்படுகின்றன.
அவ்வாறான அறிவியல் வளர்ச்சியின் ஒரு கண்டுபிடிப்பாகவே வானொலி உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு தொலைத்தொடர்பு ஊடகமாக காணப்படுகின்றது.
அதாவது தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கும் தகவல்களையும், செய்திகளையும் ஒலி வடிவில் கொண்டு சேர்க்கக்கூடிய ஓர் ஊடகமே இந்த வானொலி ஆகும்.
வானொலி பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வானொலி என்றால் என்ன
- வானொலியின் நன்மைகள்
- வானொலியின் தீமைகள்
- முடிவுரை
முன்னுரை
வெகுஜன ஊடகங்களில் இன்றளவிலும் முக்கியமான ஒரு இடத்தினைக் கொண்டுள்ள ஊடகமே வானொலியாகும். அதாவது அச்சு ஊடகங்களின் வளர்ச்சியை தொடர்ந்து ஒலி வடிவில் உருவாக்கம் பெற்ற ஒன்றே வானொலியாகும்.
ஆரம்ப காலங்களில் வானொலிப் பயன்பாடு உலக அளவில் செல்வாக்கு மிக்க நாடுகளிடமும், செல்வந்தர்களிடமும் காணப்பட்ட போதிலும் அறிவியல் வளர்ச்சி மற்றும் உலகமயமாக்கம் போன்றன சாதாரண எளிமையான நபர்களிடமும் வானொலியின் பயன்பாட்டை அதிகப்படுத்தி உள்ளமையைக் காண முடியும்.
வானொலி என்றால் என்ன
1890 ஆம் ஆண்டளவில் இத்தாலிய விஞ்ஞானி “மார்க்கோனி” என்பவரினால் உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ஒலி வகை ஊடகமே வானொலி ஆகும். இந்த வானொலி என்பது சில கம்பி இணைப்புகளை கொண்ட ஒரு பெட்டியாகும்.
ஆயினும் எந்தவித வயர் இணைப்புகளும் இன்றி தொலைதூர ஒலிபரப்புகளை செய்யும் அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.
இங்கு ஒலி அலைகள் மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு பின்னர் அந்த மின்காந்த அலைகள் மீண்டும் ஒலி அலைகளாக நேயர்களைச் சென்றடைவதனைக் காண முடியும்.
வானொலியின் நன்மைகள்
வானொலியின் மூலம் மக்கள் பல்வேறு நன்மைகளை அடைந்து கொண்ட வண்ணமே உள்ளனர்.
அந்த வகையில் இது தொலைத் தொடர்பு சாதனம் ஆகையினால் உலக நிகழ்வுகள், உலக நிலவரங்கள், வானிலை அறிக்கைகள், அரசாங்க அறிக்கைகள், சந்தை விலைகள் மற்றும் வீதி விபத்துக்கள் போன்ற அனைத்து விடயங்களையும் கேட்டறிந்து கொள்ள முடியுமாக இருத்தல், ஒரு சம்பவம் தொடர்பான செய்தியினை மூன்று நிமிடங்களில் உலகம் பூராகவும் அறிவிக்கக் கூடியதாக இருத்தல்,
மற்றும் கடலில் பயணிக்க கூடிய கப்பல்கள், வானில் பிரயாணம் செய்யக் கூடிய விமானங்கள் போன்றனவும் ரேடியோ அலைகளையே பயன்படுத்துகின்றன.
வானொலியின் தீமைகள்
ஏனைய தொலைத் தொடர்பு ஊடகங்கள் போலவே வானொலியும் சில வகையான தீமைகளை கொண்டுள்ளது.
இந்த வகையில் ஒலி வடிவம் மாத்திரமே காணப்படுகின்றமையால் சில வகையான உணர்வுகளை நேயர்கள் சரியாக புரிந்து கொள்ள முடியாமை, சில கட்சி சார்பான வானொலி ஒளிபரப்புகள் சில தவறான புரிதல்களை ஏற்படுத்துகின்றமை, வானொலி பாடல்களுக்கு சிலர் அடிமையாகின்றமை, சில செய்திகளை அல்லது முக்கிய தகவல்களை வெளியிடுகையில் வானொலி நிலையத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பபட்டு செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றமை போன்றவாரான தீமைகளும் இந்த வானொலியின் மூலம் கிடைக்கத்தான் செய்கின்றன.
முடிவுரை
அறிவியல் வளர்ச்சியில் மகத்தான கண்டுபிடிப்பாக வானொலி காணப்படுகின்றது. புதிய தொழில்நுட்ப யுகத்தில் பல்வேறு புதிய தகவல் தொடர்பு சாதனங்கள் உருவாக்கம் கண்டுள்ள போதிலும், ஏனைய தகவல் தொடர்பு சாதனங்களோடு போட்டி போட்டுக் கொண்டு இன்று வரையிலும் உலக நடைமுறையில் இருந்து வருகின்றது.
அதாவது இணையதள பக்கங்கள் மற்றும் YouTube channels போன்றவற்றிலும் வானொலி ஒளிபரப்பு நிகழ்வதனை காணலாம். இந்த வகையில் கால மாற்றங்களுக்கு ஏற்ப வானொலி ஒளிபரப்பும் மாற்றம் கண்டு கொண்டே வருவதனை காண முடிகின்றது.