மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய இலக்கணப் பகுதியாக விடை வகைகள் காணப்படுகின்றன. தமிழில் ஆறு வகையான வினா வகையும், எட்டு வகையான விடை வகையும் உள்ளன. இதனை அறியாமல் நாம் தினம் தோறும் வினா வகைகளையும், விடை வகைகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
விடை வகைகள்
ஒரு கேள்விக்கு எவ்வாறெல்லாம் விடை கொடுக்கலாம் என்பதே விடை வகையாகும். எட்டு வகையான விடை வகைகள் உள்ளன. இதனை இரண்டாக (நேரடி விடைகள், மறைமுக விடைகள்) பிரிக்கலாம்.
1. நேரடி விடைகள்
நேரடியான விடைகளை கூறுவதே நேரடி விடை வகைகளாகும். இந்த நேரடி விடை வகையானது மேலும் மூன்று வகைப்படும்.
- நேர்விடை
- மறைவிடை
- சுட்டுவிடை
2. மறைமுக விடைகள்
கேட்கப்படும் வினாவிற்கு நேரடியான விடையாக அமையாது. நேர்மறையான பதிலாக இருக்கும். இவற்றின் கீழ் 5 விடை வகைகள் உள்ளன.
- வினா எதிர் வினாவுதல் விடை
- உற்றது உரைத்தல் விடை
- கூறுவது கூறல் விடை
- இனமொழி விடை
- ஏவல் விடை
நேர் விடை – உடன்பட்டுக் கூறும் விடையாகும். மறை விடைக்கு எதிரானது.
எடுத்துக்காட்டு: கோவிலுக்குப் போவாயா? என வினவும் போது போவேன் எனக் கூறுதல்.
மறைவிடை – எதிர்மறையான பதில்களை தருவதாகும். கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மறையாக இல்லாமல் எதிர்மறையாக விடைகளை கூறுவதாகும். அதாவது மறுத்துக் கூறும் விடையாகும்.
எடுத்துக்காட்டு: எனக்காக இதை எழுதித் தருகிறாயா? என வினவும் போது மாட்டேன் என்று கூறுவது.
சுட்டு விடை – ஒரு வினாவிற்கு வாயால் விடை கூறுவதை விடுத்து ஆட்காட்டி விரலால் சுட்டி மட்டும் காட்டும் விடை சுட்டு விடையாகும். அதாவது சுட்டிக் கூறும் விடை சுட்டு விடையாகும்.
எடுத்துக்காட்டு: நூலகத்திற்கு வழியாது? என்று கேட்டால் ஆட்காட்டி விரலால் மட்டும் அந்த வழியை சுட்டிக்காட்டுவதாகும். வீடு எந்தப் பக்கத்தில் உள்ளது? என வினவும் போது, இந்தப் பக்கத்தில் உள்ளது எனக் கூறல்.
வினா எதிர் வினாவுதல் விடை – வினாவிற்கு எதிராக இன்னொரு வினாவைக் கேட்பது.
எடுத்துக்காட்டு: பாடம் படித்துவிட்டாயா? படிக்காமல் இருப்பேனா?
உற்றது உரைத்தல் விடை – வினாவிற்கு தனக்கு நேர்ந்ததை விடையாக தருவது. அதாவது வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறுவதாகும்.
எடுத்துக்காட்டு: கால் பந்து விளையாடலாமா? காலில் அடிபட்டிருக்கின்றது எனக் கூறுவது.
ஊறுவது கூறல் விடை – வினாவிற்கு இனி நேர போவதை விடயாகத் தருவது.
எடுத்துக்காட்டு: திரைப்படத்திற்கு செல்லலாமா? அப்பா திட்டுவார்
விளையாடவில்லையா? என வினவும் போது, கால் வலிக்கும் எனக் கூறுவது.
இனமொழி விடை – வினாவிற்கு நேரடியாக விடையை கூறாமல் அந்த வினாவிற்கு தொடர்புடைய அதற்கு இனமான இன்னொரு விடையை கூறுவதாகும்.
எடுத்துக்காட்டு: பாடத் தெரியுமா? என்று வினாவினால் ஆடத் தெரியும் எனக் கூறுவது.
ஏவல் விடை – ஒரு வேலையைச் செய்கிறாயா? எனக் கேட்கும் போது திரும்பவும் நம்மையே ஏவுதல் ஏவல் லிடையாகும். அதாவது மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறுவதாகும்.
எடுத்துக்காட்டு: இதைச் செய்வாயா? என்று வினவும் போது நீயே செய் என்று கூறல்.