விரிகுடா என்பது
விரிகுடா என்பது நிலப்பரப்பைச் சுற்றி அகல வாக்கில் மிகவும் பரந்த அளவில் காணப்படும் கடல் பரப்பு ஆகும். விரிகுடா ஆங்கிலத்தில் Bay என அழைக்கப்படுகின்றது. உலகின் மிகவும் பெரிய விரிகுடா வங்காள விரிகுடா ஆகும்.
வங்காள விரிகுடா
இந்தியப் பெருங்கடலில் அடங்கிய கடலே வங்காள விரிகுடா ஆகும் இக்கடலானது முக்கோண வடிவில் உள்ளது. வங்காள விரிகுடாவின் கிழக்கில் மலேய தீபகற்பமும், வடக்கில் மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேசமும் மேற்கில் இந்திய துணை கண்டமும் அமைந்துள்ளது.
இக்கடலில் இலங்கை, அந்தமான், நிக்கோபா தீவுகள் அடங்கியுள்ளன. இதனைச் சோழ மண்டல கடல் என அழைப்பதற்கு சிகாகோ பேராசிரியர்கள் இந்திய மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்காள விரிகுடாவில் பல முக்கிய நதிகள் கலக்கின்றன. உதாரணமாக கங்கை நதி, பிரம்மபுத்திரா நதி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, மெக்னா, ஐராவதி ஆகியவை வங்காள விரிகுடாவில் கலக்கும் நதிகளாகும்.
இக்கடலில் கரையில் அமைந்துள்ள சில முக்கிய நகரங்களாக கொல்கத்தா, சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பலவும் காணப்படுகின்றன. இதன் இருப்பிடம் காரணமாக வங்காள விரிகுடாவின் முழு பகுதிகளிலும் மழைக்காலங்களினால் தாக்கப்படுகின்றன. குறிப்பாக சூறாவளி, பலத்த காற்று போன்றனவும் ஏற்படுகின்றன.
மேலும் கடல் போக்குவரத்திற்கு சிறந்து விளங்குவதால் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த வணிக பாதையாக அமைகின்றது.
இதன் கரையின் கொல்கத்தா போன்ற முக்கிய இயற்கை துறைமுகங்கள் காணப்படுவதால் வணிக நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைகின்றது. உணவு, ரசாயன பொருட்கள், மின் பொருட்கள், ஜவுளி மற்றும் வணிக நடவடிக்கைகள் இந்த வளைகுடா வழியில் மேற்கொள்ளப்படுகின்றன.
மெனாய் விரிகுடா (Menai Bay)
மெனாய் விரிகுடாவானது தன்சானியாவின் ஜான்சிபார் தீவுக் கூட்டத்தின் மிகப்பெரிய உங்குயா தீவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ளது. மெனாய் விரிகுடாவின் நீண்ட கடற்கரையில் 19 கிராமங்கள் உள்ளன. இதன் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 17 ஆயிரம் ஆகும். வாழ்விடங்கள் மற்றும் தாவர விலங்கினங்களைப் பாதுகாக்கும் ஒரு கடல் அமைப்பாக இது காணப்படுகின்றது.
சான் பிரான்சிஸ்கோ விரிகுடா (San Francisco Bay)
அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த விரிகுடா வழியாக சாக்ரமென்ட்டோ மற்றும் சான் யோக்குவைன் ஆறுகளில் இருந்து அமைதிப் பெருங்கடலை அடைகின்றது.
சான் பாப்லோ விரிகுடாவின் தென்முனை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவுடன் இணைகிறது எனினும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள அனைத்து விரிகுடாக்களுமே சான் பிரான்சிஸ்கோ விரிகுடா என்றே அழைக்கப்படுகின்றது.
துப்லி விரிகுடா (Tubli Bay)
துப்லி விரிகுடாவானது பக்ரைன் நாட்டில் உள்ளது. பக்ரைன் தீவுக்கும் சிட்ரா தீவுக்கும் இடையில் உள்ள பெரிய விரிகுடாவாக காணப்படுகின்றது. இது பக்ரைன் வளைகுடா என்றும் அழைக்கப்படுவதுண்டு.
இவ்வரிகுடாவில் நபி சலே எனும் தீவும் உள்ளது. இவ் விரிகுடாவானது வளமான கடல் வாழ் உயிரினங்களுக்கும், பறவைகளுக்கும் மற்றும் அதன் எல்லையைச் சுற்றியுள்ள காடுகளுக்கும் மிகவும் பெயர் பெற்றதாகும்.
எனினும் இன்று சட்டவிரோத நில மீட்பு சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நீரூற்றுக்களிலிருந்து நன்னீர் விநியோகம் குறைந்து சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றது.